நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றம்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் இந்த வாரத்திற்குள் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக மாற்றப்படும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள், தங்களுக்கு, உடல்நிலை சரியில்லை என்றதும், மருத்துவ உதவியை பெற சிறிது தயக்கம் காட்டுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் அண்மையில் பகிரப்பட்ட காணொளிகள் மற்றும் படங்கள் காரணமாக மருத்துவமனைகளில் மருத்துவ உதவி பெறுவதில் பொதுமக்கள் பீதியடைந்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுமக்கள் தயவுசெய்து அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மருத்துவமனைகளில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல பயப்பட வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், டெல்டா மாறுபாடு இலங்கையில் காட்டுத்தீ போல் பரவி வரும் சூழ்நிலையில், மக்கள் பெரிய கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம் என்று வைத்தியர் குணசேனா அறிவுறுத்தியுள்ளார்.

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
