மூன்று நாட்களில் உச்சம் தொட்ட அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய்
அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் கிடைத்த வருவாய் 134 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த 11ஆம் மற்றும் 12ஆம், 13ஆம் திகதிகளில் இந்த வருவாய் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.
புதிய நடைமுறை
இதேவேளை வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி அதிவேக நெடுஞ்சாலையில் பணம் செலுத்தும் வசதி தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இந்த வசதியானது எதிர்வரும் மே முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam