வடக்கு - கிழக்கில் சாதனை படைத்த பெண்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (Video)
வடக்கு, கிழக்கு பகுதிகளில் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனைகளைப் படைத்த பெண்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
விளித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
சாதனைப் பெண்களாகத் திகழும் விஞ்ஞானத்துறையில் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்ற அக்கரைப்பற்று தர்ஷிகா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் பங்கு கொண்டு தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி ஆகியோர் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
விளித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் தலைவி சசிகலா நரேன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.
இதில் விளித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின்
உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam