சௌபாக்கியா விசேட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சௌபாக்கியா விசேட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சௌபாக்கிய விசேட வீடமைப்புத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், சமுர்த்தி சமுக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சாஜகான், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எம்.என்.சியாத், ஏ.எல்.எம்.நியாஸ், கிராம சேவை அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகிதநகர் பகுதியில் நான்கு வீடுகளும், மாஞ்சோலை பிரதேசத்தில் மூன்று வீடுகளுமாக ஏழு வீடுகள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி உதவியும், மக்களின் இரண்டு இலட்சம் ரூபாய் பங்களிப்பு மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களின் பாவனைக்குக் கையளிக்கப்பட்டதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்துள்ளார்.









விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam