சஜித் தரப்புடன் இணைந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது - ரணில்
தமது தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தற்பொழுது தேர்தல் அணுகு முறைகளினால் தேர்தல்களை வெற்றிகொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
தற்பொழுது அனைத்து விடயங்களும் மாற்றம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தேர்தல்களை அணுகும் விதமும் வியூகம் வகுக்கும் விதமும் மாற்றம் பெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். புதிய வாக்காளர்களை உள்வாங்காமல் யாராலும் வெற்றி பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மரபு ரீதியான முறைமைகளில் இருந்து விடுபட்டு புதிய பயணத்தை தொடங்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்பட்டால் தேர்தல்களை வெற்றிகொள்ள முடியும் என இரண்டு கட்சிகளினதும் பல அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.