மீண்டும் மண்சரிவு அபாயம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கண்டியில் மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் இன்று (21) மாலை வெளியிட்ட சிவப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு மையங்களுக்கு இடம்பெயரச் செய்யும் நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு அபாயம்
கண்டி மாவட்டத்தின் யட்டினுவர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடுமையான சரிவுகள், பள்ளத்தாக்குகள், மண் தடுப்பணைகள் மற்றும் உயர் அபாயப்பகுதிகள் வழியாகச் செல்லும் சாலைகளில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 7.00 மணியளவில் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக குறிக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
எச்சரிக்கை
மேலும், இந்த எச்சரிக்கையை பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்க அனைத்து ஊடகங்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, வெளியிடப்பட்ட இடம்பெயர்வு அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பது மிக முக்கியமானது என அனர்த்த முகாமைத்துவ மையம் வலியுறுத்தியுள்ளது.
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam