1.8 மில்லியன் யூரோ அவசர நிதியுதவி வழங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கடும் மண்சரிவு மற்றும் வெள்ளப் பேரழிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) 1.8 மில்லியன் யூரோ அவசர நிதியுதவியை விடுவித்துள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதோடு, இதில் 500,000 யூரோ சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
சர்வதேச உதவிகள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்று, அவர்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஹாட்ஜா லஹ்பிப் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவிக்கு மேலதிகமாக, ஜேர்மனி 4,600 தங்குமிடப் பொருட்களையும், பிரான்ஸ் 3,400 பொருட்களையும் வழங்கியுள்ளன. அதேவேளை இத்தாலி பொறியியல் நிபுணர்கள் குழுவை அனுப்பியுள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் அவசரகால செய்மதி சேவை மூலம் இதுவரை 30 வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 2025 இல் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான மொத்த மனிதாபிமான உதவி 87 மில்லியன் யூரோவை எட்டியுள்ளதாகவும் ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam