கிரீன்லாந்தில் ஐரோப்பிய நாடுகளின் இராணுவம் குவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் தங்களது இராணுவத்தை அங்கு அனுப்பியுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உத்தரவின் பேரில், முதற்கட்டமாக 15 வீரர்கள் அடங்கிய பிரெஞ்சு இராணுவக் குழு கிரீன்லாந்தின் தலைநகர் நூக் (Nuuk) சென்றடைந்துள்ளது.
விரைவில் தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழிப் படைகள் அங்கு அனுப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனுப்பப்பட்டுள்ள இராணுவ வீரர்கள்
பிரான்ஸ் மட்டுமின்றி ஜெர்மனி, ஸ்வீடன், நோர்வே, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் தங்களது இராணுவ வீரர்களை அங்கு அனுப்பியுள்ளன.
ஒப்பரேஷன் ஆர்க்டிக் என்டியூரன்ஸ் என்ற டென்மார்க் தலைமையிலான இந்த பயிற்சியின் மூலம், கிரீன்லாந்தின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், அமெரிக்காவிற்கு ஒரு வலுவான அரசியல் செய்தியைச் சொல்லவும் ஐரோப்பிய நாடுகள் முயற்சித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் தங்களது இராணுவத்தை அங்கு அனுப்பியுள்ளன.

எனினும், டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்காக கிரீன்லாந்து மிக முக்கியமானது எனத் தொடர்ந்து கூறி வருகிறார்.
இராணுவ வலிமை
கிரீன்லாந்தை டென்மார்க்கிடமிருந்து விலைக்கு வாங்குவது அல்லது இராணுவ வலிமையைப் பயன்படுத்தி அதைக் கைப்பற்றுவது என இரண்டு வழிகளையும் பரிசீலிப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவோ அல்லது சீனாவோ கிரீன்லாந்தைக் கைப்பற்றினால் அது அமெரிக்காவிற்கு ஆபத்து என்றும், அதைத் தடுக்கவே தான் இந்த முடிவை எடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த நிலையில் நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் மீது மற்றொரு உறுப்பு நாடான அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது நேட்டோ அமைப்பின் முடிவாக அமையும் என்று போலந்து உட்பட்ட பிற ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri