செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வரவுள்ள ஐரோப்பியத் தூதுவர் குழு
யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு இலங்கை வருகை தரவுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தரும் மேற்படி குழுவினர், 22 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை.. ஜனாதிபதி மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan