இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஐரோப்பிய நாடு
இலங்கையர்களுக்கு ருமேனியாவில் தொழில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான ஒரு வருட காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ருமேனியாவுக்கு தொழில்வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்கள் குழுவொன்றுக்கு விமான டிக்கட்களை வழங்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
பணியாளர்களின் நடத்தை மற்றும் திறனைப் பொறுத்து ஒரு வருட ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க ஏற்கனவே வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.
ருமேனியா பணிக்காக தற்போது வரையில் சுமார் 800 பேரின் பட்டியல் தூதரகத்திடம் இருப்பதாகவும் அவர்களும் எதிர்காலத்தில் வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ருமேனிய வேலைகளுக்காக பதிவு மற்றும் நிர்வாகக் கட்டணம், விசா மற்றும் விமான டிக்கெட் கட்டணங்களை மாத்திரமே அறவிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ருமேனிய வேலைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பெரும் தொகையை அறவிடுவதாக வெளியான தகவல்கள் தவறானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri