ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அறிமுகமாக உள்ள புதிய செயலி
ஐரோப்பிய மக்களின் முக்கிய ஆவணங்களை கையடக்க தொலைபேசியில் சேமித்து வைக்கும் 'EUdi Wallet'(EU Digital Identity Wallets) எனப்படும் புதிய செயலியொன்றை அறிமுகப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
குறித்த செயலியின் உதவியுடன், மக்கள் தங்கள் முக்கிய ஆவணங்களான கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், சுகாதார அட்டை அல்லது கல்வி ஆவணங்கள் போன்றவற்றை கையடக்க தொலைபேசியில் சேமித்து வைக்கலாம்.
இது முற்றிலும் இலவசமான செயலியாக வெளிவர இருப்பதோடு அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இது பொருந்தும்.
சேமித்து வைக்கப்படும் ஆவணங்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த ஒவ்வொரு நாடும் 2027ஆம் ஆண்டுக்குள் குறித்த செயலியின் சொந்த பதிப்பை உருவாக்கும்.
அத்துடன், சேமித்து வைக்கப்படும் ஆவணங்களை பார்க்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க முடியும்.
நேரத்தை சேமிப்பதற்காகவும் காகித வேலைகளை குறைப்பதற்காகவும் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



