பொறுப்புக்கூறலை முன்னெடுக்குமாறு இலங்கையை வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும், சிவில் சமூக ஈடுபாட்டிற்கு முழு இடத்தை வழங்குவதற்கும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும் இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் (European Union) வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் நேற்று (09) ஜெனீவாவில் (Geneva) உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு எதிர்கொண்ட சவால்களை, குறிப்பாக 2022 நிதி நெருக்கடி தொடர்பாக, அங்கீகரிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
இந்தநிலையில், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு, திட்டமிட்டு உருவாக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் நன்கு கவனித்தாலும்,அதன் பணி பற்றிய தெளிவான வரைவை எதிர்ப்பார்ப்பதாக ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையின் முன்னேற்றம் இல்லாதது குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
