இலங்கை தொடர்பான தமது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியக்குழுவினர்
ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இன் கீழ் பொருந்தும், 27 சர்வதேச நியமங்களைச் செயல்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இன்று பயணத்தை முடித்து கொண்டது.
இந்த நியமங்கள், இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை, நல்லாட்சி கொள்கைகளை உள்ளடக்கியது.
இந்த நிலையில் கடந்த பத்து நாட்களில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் பரந்த அளவிலான சந்திப்புகளை நடத்தியிருந்தனர்.
அதிகாரிகள், மனித உரிமை பாதுகாவலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சிவில் சமூகத்தினரையும் அவர்கள் சந்தித்தனர்.
அத்துடன் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டிருந்ததுடன், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) பற்றியும் விவாதித்திருந்தனர்.
2017 இல், ஜிஎஸ்பி திட்டம், இலங்கைக்கு மீண்டும் கிடைப்பதற்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் முக்கியமாக அமைந்திருந்தது.
இதேவேளை இன்று இலங்கையிலிருந்து புறப்படும் ஐரோப்பிய ஒன்றியக்குழுவினர், இலங்கை தொடர்பான தமது அறிக்கையை ஒன்றியத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இதனையடுத்தே, இலங்கைக்கான
ஜிஎஸ்பி பிளஸ் தொடர்பான நிலைப்பாடு வெளியிடப்படவுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 14 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
