வயது வந்தோருக்கான இணையதளங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கை
ஐரோப்பிய ஒன்றியமானது வயது வந்தோருக்கான (Adult) குறிப்பிட்ட சில இணையதளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய ஐரோப்பிய ஒன்றியமானது (European Union) ஓன்லைன் உள்ளடக்க விதிமுறைகளுக்கு இணங்க, வயது வந்தோருக்கான உள்ளடக்க நிறுவனங்களிடம் இடர் மதிப்பீட்டு அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் சேவைகள் சட்டம்
குறித்த நிறுவனங்களின் சேவைகளுடன் தொடர்புடைய முறையான அபாயங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஆணையம் நேற்று(19.04.2024) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் (DSA) கீழ் மூன்று நிறுவனங்கள் மிகப்பெரிய நிகழ்நிலை(online) தளங்களாக நியமிக்கப்பட்டதோடு அவற்றின் தளங்களில் இருந்து சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அகற்ற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இந்த டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் (DSA) விதிகள் ஏப்ரல் 21 முதல் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், வயது வந்தோருக்கான குறிப்பிட்ட சில இணையதளங்கள் ஏப்ரல் 23 ஆம் திகதிக்குள் DSA விதிகளுக்கு இணங்க வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம் என்று கூறியுள்ளது.
டிஜிட்டல் சேவைகள் சட்ட விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால், இந்த நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய வருடாந்திர வருவாயில் 6 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |