ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு முன்வைக்கப்பட்ட அறிவுறுத்தல்
இலங்கை தனது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கி பணியாற்ற வேண்டியது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இன்று(23) காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வலியுறுத்தல்
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை குடிமக்கள் ஜனநாயக, அமைதியான மற்றும் ஒழுங்கான மாற்றத்துக்கான செயற்பாட்டில் உள்ளனர்.
எதிர்ப்பாளர்களுக்கு எதிரான தேவையற்ற வன்முறையை கண்டிக்கின்றோம், அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமை முக்கியமானது.
அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தேவையற்ற சக்தியை பயன்படுத்துவதைக் கண்டிகத்தக்கது.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதையில் கொண்டு செல்வதற்கு, கட்டமைக்கப்பட்ட திட்டத்தை விரைவாக நிறுவி, செயற்படுத்த வேண்டும்.
உள்நாட்டு சூழ்நிலையின் அவசர தேவைக்கு, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதையில் திரும்ப செய்வதற்கு, சீர்திருத்தங்களின் ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டத்தை விரைவாக நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் தேவைப்படுகிறது.
இந்த சூழலில், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது இன்றியமையாதது, அத்துடன் நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துதலும் அவசியம்.
இலங்கை மக்களுக்கு உதவும் அனைத்து முயற்சிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என மேலும் தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்ட உதவிகள்
பல ஆண்டுகளாக, ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கை மக்களுக்கு 1 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளன.
ஜி.எஸ்.பி பிளஸ் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய சந்தைக்கான முன்னுரிமை சலுகையை 2017 இல் மீண்டும் அறிமுகப்படுத்தியது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது.
எனவே புதிய அரசாங்கம் அதன் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கி செயல்படும் என எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 1 நாள் முன்

சொத்துக்களை இழந்தேன்! நடிகை ராதிகாவின் சீரியல் என்னை கிழவன் ஆக்கிவிட்டது.. நடிகர் பப்லூ பேச்சு Cineulagam
