இனப்பிரச்சினையை திசைதிருப்ப உருவாக்கப்படும் மத நிறுவனங்கள்: சி.சிறீதரன் குற்றச்சாட்டு
தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை திசைதிருப்பும் வகையிலும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காவும் சில மத நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அரசியல் இலாபம் தேடப்படுகிறது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற அடையாள உண்ணாவிரதப்போராட்டத்திலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில், பூநகரி, மாங்குளம், பரந்தன், உருத்திரபுரம் பகுதிகளில் அரச மரங்கள் நடப்பட்டு சமநேரத்தில் புத்தர் சிலைகளை வைக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புத்த விகாரைகள்
தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் தற்போது அதிகளவான புத்த சிலைகள் வைக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் இடம்பெறுகின்றன.
இதேநேரம் கச்சதீவிலும் புத்த விகாரை கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. வலி. வடக்கில் உள்ள பல ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



