EPF - ETF நிதிகளுக்கு ஆபத்து: வசந்த சமரசிங்க எச்சரிக்கை
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(ETF) மற்றும் அறக்கட்டளை நிதி(EPF) என்பவற்றை அரசாங்கம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அமைப்பாளருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தோட்டப்புறங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், நகர்ப்புற பகுதிகளில் பணிபுரிபவர்கள், மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(ETF) மற்றும் அறக்கட்டளை நிதி(EPF) என்பவற்றை அரசாங்கம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்
இதற்கான தீர்வு கிடைக்கும்வரை நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம்.
அரசாங்கத்தினால் கொள்ளையடிக்கப்படும் பணம் எமது நட்டு மக்களுக்கு சொந்தமான ஒன்றாகும்.
எங்கள் நிதியைத் தொட எவருக்கும் உரிமையில்லை என்பதை ஒருமுறை எடுத்துக்கூற விரும்புகின்றேன்." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
