எஸ்ட்ரா ஜெனெகா - ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு பொருத்தமானது! அசெல குணவர்தன
எஸ்ட்ரா ஜெனெகா - ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி இலங்கையின் கொரோனா தொற்றுக்கு எதிரான சிறந்த நிவாரணியாக இருக்கும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசெல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் எந்தவொரு தடுப்பூசியையும் பயன்படுத்துவது குறித்த இறுதி முடிவு, உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்கள் போன்ற எண்ணற்ற பிற காரணிகளைப் பொறுத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கொரோனாவுக்கு எதிராக பயனுள்ள தடுப்பூசி கிடைப்பது குறித்து இலங்கை இப்போது பல்வேறு தரப்புக்களுடனும் தொடர்பு கொண்டுள்ளது.
எனினும் எந்தவொரு தடுப்பூசியையும் தீர்மானிக்கும் போது, அதன் உற்பத்தி நிலை மற்றும் விநியோக ஏற்பாடுகள் குறித்து பற்றி சிந்திக்க வேண்டும்.
தடுப்பூசி தேவையில் 20 சதவீதத்தை வழங்க உலக சுகாதார மையம் இணக்கம் வெளியிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸின் திரிபு குறித்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய திரிபு பரிமாற்றக் கூடிய விகிதம் முந்தையதை விட அதிகமாக உள்ளது.
இருந்தபோதிலும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என்றும் அசேல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.