நூறு வீத தடுப்பூசி இலக்கை அடைந்துள்ள பெருந்தோட்டத் தொழிலாளா்கள்
இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் 100 வீதத்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிராக பெருந்தோட்டத் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விடயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை அடைந்துள்ளதாக இலங்கைப் பெருந்தோட்ட அதிகாாிகள் சம்மேளனம் மற்றும் தோட்ட மனித அபிவிருத்தி அறக்கட்டளை (PHDT) ஆகியன தொிவித்துள்ளன.
2021, ஒக்டோபா் 29ஆம் திகதி நிலவரப்படி, 7 பிராந்தியங்களில் 95% க்கும் அதிகமான, பெருந்தோட்டத் தொழிலாளா்களுக்கு முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட உாிமையாளர் சங்கப்பேச்சாளா் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 20-29 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தல் செயற்பாடுகளில் அரசாங்கத்துக்கு உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



