140 வகையான அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை: சமில் விஜேசிங்க
அரச வைத்தியசாலைகளில் சுமார் 140 வகையான அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்திய கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வலிநிவாரணிகள், பிரசவத்திற்குப் பின் அதிக இரத்த இழப்பைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள், இரத்தக் கசிவுக்கான மருந்துகள், இன்சுலின் மற்றும் மயக்க மருந்துகள் என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைகளில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு
சுவாசக் கஷ்டங்களுக்கு பரிந்துரைக்கப்படும் அடிப்படை மருந்துகள், எளிமையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வலிநிவாரணிகள் ஆகியவையும் பற்றாக்குறையாக உள்ள மருந்துகளில் அடங்கும் என்று வைத்திய கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மருந்து இறக்குமதிகள்
புற்றுநோயாளிகளுக்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு
அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அகில இலங்கை மருந்து விநியோகஸ்தர்கள்
சங்கமும் குற்றம் சுமத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
