மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு:அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் மீண்டும் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் எனவும் வரி சீராய்வு திருத்தச்சட்டம் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறித்த விடயம் தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல் வெளியிட்டுள்ளார்.
நிகழ்வொன்றில் நேற்று(04.12.2022) கலந்துக்கொண்டு பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பொய்யான விடயம்
நாட்டில் எதிர்வரும் 9ஆம் திகதி வரி திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படமாட்டாது எனவும் அனைத்துப் பொருட்களின் விலைகள் உயரும் என கூறப்படுவது பொய்யானது விடயம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,“வரி திருத்த சட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி தாக்கல் செய்யப்படாது. அடுத்த வாரம் 13ம் திகதி அல்லது வேறு ஏதாவது ஒரு நாளில் தாக்கல் செய்யப்படலாம்.
இரண்டாவது விடயம் உத்தேச திருத்தங்கள் எதுவும் இந்த வருட வரவு செலவுத் திட்ட ஆவணத்துடன் தொடர்புடையவை அல்ல. அவை இடைக்கால வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் இருந்த சில விடயங்கள் அல்லது இந்த வரவு செலவுத் திட்ட ஆவணத்திற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட சில விடயங்கள் ஆகும்.
நேரடி வரிகள்
தொடர்பானவை சில உண்மைகளின் திருத்தம் காரணமாக எல்லா பொருட்களின் விலையும் எந்த நேரத்திலும் அதிகரிக்க எந்த காரணமும் இல்லை.
ஏனெனில் அந்தத் திருத்தங்களில் முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் நேரடி வரிகள் தொடர்பானவை.
மறைமுக வரியாக, அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற கட்டிடங்களுக்கு வட் வரி மட்டுமே அதிகரிக்கப்படுகிறது. ஒருவர் கட்டிடம் கட்டி முதல் முறையாக விற்கும் போதுதான் அது கூட்டுச் சொத்தாக மாறும்.
யாராவது வாங்கி மறுவிற்பனை செய்யும் போது, அந்த வரி பொருந்தாது. இந்த வரித் திருத்தங்கள் பொதுவாக ஜனவரி முதல் திகதியில் இருந்து சட்டங்களாக மாறும். எல்லாப் பொருட்களின் விலையும் உயரும் என்பது நடக்காது என்பதை பொறுப்புடன் சொல்கிறேன்.”என தெரிவித்துள்ளார்.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri
