வரி திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
சில பொருட்களின் விசேட வர்த்தக வரியை திருத்துவது தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிசம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உரிய வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
திருத்தப்படும் வரிகள்

இதன்படி கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் 1 கிலோ வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட வர்த்தக வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 18ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 100 ரூபா விசேட வர்த்தக வரி 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri