தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டமையால் சொகுசு பேருந்து சேவை
திருத்த வேலை காரணமாக வவுனியா - கொழும்பு தொடருந்துப் போக்குவரத்து
தடைப்பட்டுள்ளமையால் வவுனியாவில் இருந்து கொழும்புக்கான மேலும் ஒரு சொகுசு
பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (11.05.2023) முதல் இரவு 1.30 மணிக்கு அதி சொகுசு பேருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பை சென்றடையும்.
பின்னர் கொழும்பில் இருந்து நண்பகல் 12.30 இற்கு புறப்பட்டு மாலை வவுனியாவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு பேருந்து சேவை
இதற்கான ஆசனப் பதிவுகளை புதிய பேருந்து நிலையத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும்.
இதேவேளை, ஏற்கனவே இரவு 11 மணிக்கு ஒரு அதிசொகுசு பேருந்து வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்று, காலை 9.30 இற்கு மீண்டும் வவுனியா நோக்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 6 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan