தமிழ்-சிங்கள தொழிலாளர் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்: ஈரோஸ் ஜனநாயக முன்னணி

May Day Sri Lanka
By Badurdeen Siyana May 01, 2023 10:42 AM GMT
Report

ஈழப்புரட்சி அமைப்பானது ஈரோஸ் ஜனநாயக முன்னணியாக அரசில் கட்சியாகப் பதிவு செய்த பின் வரும் முதலாவது தொழிலாளர் தினம் இன்று இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் தொழிலாளர் வர்க்கம் அனைத்து ஒடுக்கு முறைகளில் இருந்து விடுபட ஒன்றுபட்டுச் செயல்படுமாறு ஈரோஸ் ஜனநாயக முன்னணி அறை கூவல் விடுக்கின்றது.

ஈழப்புரட்சி அமைப்பானது ஆரம்பக்காலம் தொட்டே மே தினத்தை ஒரு விழாவாக மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாடி வருகின்றது.

அந்த வகையில்  இன்றைய தினம் (01.05.2023) கொண்டாடப்படும் மே தினத்தை முன்னிட்டு கூறியுள்ளதாவது, இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மே தின விழாக்கள் எமது அமைப்பால் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்துள்ளன. அதில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழ்-சிங்கள தொழிலாளர் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்: ஈரோஸ் ஜனநாயக முன்னணி | Eros Democratic Front

இருமொழி பேசுகின்ற மக்கள்

1989 இல் மலையகத்தில் நடாத்தப்பட்ட மே தினமானது அங்குள்ள பிளைப்புவாத முதலாளித்துவ கட்சிகளை அம்பலப்படுத்திய ஒரு அரசியல் எழுச்சி ஊட்டும் ஆர்ப்பாட்ட நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

தனிநாடு கேட்டுப் போராடிய அரசியல் கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் வெறுமனே வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகளை இருமொழி பேசுகின்ற மக்களுக்கிடையிலான பிரச்சினையாகவே பார்த்தார்கள்.

ஆனால் எமது ஈரோஸ் ஜனநாயக முன்னணியானது இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களின் பிரச்சினை ஒரு வர்க்க ரீதியான பிரச்சினை என்பதையும் ஆய்வின் மூலம் ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ளது.

1948ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்தபின் முதல்முதலாக சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி 10 இலட்சம் தோட்டத் தொழிலாளர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டு இந்திய நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.

தமிழ்-சிங்கள தொழிலாளர் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்: ஈரோஸ் ஜனநாயக முன்னணி | Eros Democratic Front

தமிழர்களின் பிரச்சினை

அதனைத் தொடர்ந்து 1956ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற விவசாயத் தொழிலாளர்களுடைய விவசாய நிலங்களைச் சிங்கள முதலாளித்துவ அரசு பறித்து அவ் விவசாயிகளை நிற்கதிக்குள்ளாக்கியது.

1970ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிங்கள முதலாளித்துவ அரசு 1972 ஆம் ஆண்டு தரப்படுத்தல் என்ற போர்வையில் மத்தியத்தர. பாட்டாளி வர்க்க தமிழ் பேசும் மக்களின் குழந்தைகளுடைய கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வன்செயல் ஏற்பட்டு ஆயுதப்போராட்டமாக மாறின. இப்போராட்டத்தை முன்னெடுத்த அரசியல் கட்சிகள் இயக்கங்கள் தமிழர்களின் பிரச்சினைகளை இருமொழி பேசுகின்ற மக்களுக்கிடையிலான பிரச்சினையாகவே பார்த்தார்கள்.

அடிப்படையில் மலையக தோட்டத் தொழிலாளர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டமை, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் விவசாயத் தொழிலாளர்களுடைய விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டமை, தமிழ் ஏழை மாணவர்களுடைய கல்வியுரிமை பறிக்கப்பட்டமை, வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மீனவத்தொழிலாளர்கள் கடலுக்குச் சென்று தமது மீன்பிடித் தொழிலைச் சுதந்திரமாக மேற்கொள்ள முடியாமல் தடுத்தமை போன்றவற்றை மையமாகப் பார்க்கின்ற பொழுது, இலங்கையில் வாழ்கின்ற வடக்கு- கிழக்கு மலையக மக்களுடைய பிரச்சினை இருமொழி பேசுகின்ற மக்களுக்கிடையிலான பிரச்சினையாக மாத்திரம் பார்க்காமல். அது ஒரு வர்க்கப் பிரச்சினை என்பதையும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி பறை சாற்றி நிற்கின்றது.

தமிழ்-சிங்கள தொழிலாளர் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்: ஈரோஸ் ஜனநாயக முன்னணி | Eros Democratic Front

தமிழ்மொழி பேசும் தொழிலாளர் 

அதேவேளை, இலங்கையில் மாறிமாறி ஆட்சி அமைக்கின்ற சிங்கள முதலாளித்துவ அரசுகள் சிங்கள மொழி பேசும் தொழிலாளர்களையும் தமிழ் மொழி பேசும் தொழிலாளர்களையும் ஒன்று சேர விடாமல் பிரித்தாண்டு வந்திருக்கின்றது.

இந்த அரசுகள் எம்மை பிரித்து வைத்திருப்பதைக் காலம் தாழ்த்தியாவது சிங்கள தொழிலாளர்கள் உணர்ந்து இலங்கையில் எம்முடன் கைகோர்த்து இலங்கை வாழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவேண்டும் என்பதே எமது பேரவா.

சிங்கள மொழி பேசும் தொழிலாளர் வர்க்கமும் தமிழ்மொழி பேசும் தொழிலாளர் வர்க்கமும் ஒன்றிணைந்து பொருளாதார ரீதியாக நாட்டை கட்டியெழுப்பவேண்டியது எமது கடமையாகும். அதே வேளையில் அரசானது இம்மே தினத்தில் தொழிலாளர்களுடைய உரிமைகளை உணர்ந்து அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியங்களை வழங்கி வர்க்க பேதம் தொழில் சுரண்டல் அற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்குப் பாடுபட வேண்டும் எனக் கேட்டு நிற்கின்றோம். 

தமிழ்-சிங்கள தொழிலாளர் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்: ஈரோஸ் ஜனநாயக முன்னணி | Eros Democratic Front

இந்த புரட்சிகர நாளில் எமது கோசமாக முன்வைப்பது

1. தமிழர், சிங்களவர் இஸ்லாமியர் என்ற இனபேதமற்ற முறையில் இலங்கை தொழிலாளர் என்ற வகையில் ஒன்றுபடுவதே எமது மிகப்பெரிய தேவை.

2. தமிழ் மொழி பேசும் தொழிலாளர் வர்க்கமும் சிங்கள மொழி பேசும் தொழிலாளர் வர்க்கமும் வர்க்க ரீதியாக ஒன்றிணைவோம்.

3. சிங்கள மக்கள் தமிழ் மக்கள் எமது எதிரிகள் அல்லர் என்பதையும் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் எமது எதிரிகள் இல்லை என்பதையும் உணர்ந்து செயற்படுவோம்.

4. மலையக மக்களே சுரண்டல் வாத கட்சிகளை நிராகரித்து சரியான கட்சிகளை இனங்காணுங்கள்.

5. இன மத பேதமற்ற பாட்டாளிகளாக ஒன்றுபட்டு தன்னிறைவை நோக்கி பயணிப்போம். தன்னிறைவை நோக்கிய பயணம். ஈரோஸ் ஜனநாயக முன்னணி

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US