ஏறாவூர் காட்டு மாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பால்குட பவனி
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு - ஏறாவூர் காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு பால்குட பவனி நேற்று இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் வீரபத்திரர் சுவாமி ஆலயத்தில் இருந்து பால்குட பவனி பக்த அடியார்களால் ஏறாவூர் பிரதான மற்றும் உள்ளக வீதிகளால் பவனியாக கொண்டு வரப்பட்டு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து மீண்டும் கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை அடைந்தது.
விசேஷ அபிஷேகம்
பால்குட பவனியானது ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை அடைந்ததும் அம்பாளுக்கான விசேஷ அபிஷேகம் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்பாளுக்கான இன்றைய பால்குட பவனியில் கலந்து கொண்டிருந்ததுடன், காவடி உள்ளிட்ட பல நேர்த்திக்கடன்களையும் பக்தி பூர்வமாக செலுத்தினர்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 10 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
