பெண் என்ற வரையறை குறித்து பிரிட்டன் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
சமத்துவச் சட்டத்தில் "பெண்" என்ற வரையறை உயிரியல் பாலினத்தை (Biological Sex) குறிக்கிறது என பிரிட்டன் உயர் நீதிமன்றம் இன்று வெளியிட்ட முக்கியமான தீர்ப்பில் அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த தீர்ப்பு திருநங்கைகள் மீது எந்தவித அநீதியும் ஏற்படாது என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு, பாலின அடையாள மாற்ற சான்றிதழ் (Gender Recognition Certificate) பெற்ற திருநங்கை ஒருவர், சமத்துவச் சட்டத்தின் கீழ் "பெண்" என சட்டபூர்வமாக உரிமை பெற்றவராக கருதப்படலாமா? என்பதையே மையமாகக் கொண்டது.
இந்த வழக்கை போர் வுமென் ஸ்கொட்லான்ட் For Women Scotland எனும் இயக்கம் தாக்கல் செய்தது. அவர்கள், சமத்துவச் சட்டத்தின் உரிமைகள் உயிரியல் பாலினத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என வாதிட்டனர்.
2018-ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்து அரசு அரசு துறைகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வெளியிட்ட வழிகாட்டலில், பாலின அடையாள மாற்ற சான்றிதழ் கொண்ட திருநங்கை ஒருவர் சட்டப்படி பெண்ணாகவே கருதப்பட வேண்டும் என கூறியிருந்தது.
ஸ்காட்லாந்து நீதிமன்றத்தில் வழக்கில் தோற்ற For Women Scotland, கடந்த நவம்பரில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இன்று For Women Scotland-க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு வெளியே இந்த தீர்ப்பை வரவேற்று ஆரவாரம் செய்தது அந்த அமைப்பின் ஆதரவாளர்கள்.
"Equality Act 2010-ல் 'பெண்கள்' மற்றும் 'பாலினம்' என்ற சொற்கள் உயிரியல் பெண் மற்றும் உயிரியல் பாலினத்தையே குறிக்கின்றன," என உயர் நீதிமன்ற துணைத் தலைவர் நீதியர் பாட்ரிக் ஹோட்ஜ் தெரிவித்துள்ளார்.
அவரது தீர்ப்பில் மேலும், "இந்த தீர்ப்பை, சமூகத்தில் ஒரு குழுவின் வெற்றி, மற்றொரு குழுவின் தோல்வி என புரிந்துகொள்ள வேண்டாம்," என்றும், திருநங்கைகள் உரிமைகள் சட்டபூர்வமாக பாதுகாக்கப்பட்டவை என்றும், பாலின அடையாள மாற்றம் எனும் சமத்துவச் சட்ட பாதுகாப்பு அவர்கள் மீது தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் கூறினார்.
இதேவேளை, சில விமர்சகர்கள், இந்த தீர்ப்பு, பெண்களுக்கு மட்டுமான பாதுகாப்பு சேவைகள் (மாதவிடாய் தஞ்சல் மையங்கள், மருத்துவ வார்டுகள், விளையாட்டு போட்டிகள் போன்றவை) குறித்த விதிகளை பாதுகாக்கும் வழியை உறுதி செய்துவிட்டது எனக் கூறுகின்றனர்.
மற்றொரு பக்கம், திருநங்கை உரிமை போராளிகள் இந்த தீர்ப்பு, வேலை வாய்ப்புகள் மற்றும் சமூக உரிமைகளில் அவர்களுக்கு பாகுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என கவலை தெரிவித்துள்ளனர்.
இதேபோல், அமெரிக்காவிலும், ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்ட கடைசி ஆணைகளில், திருநங்கைகள் இராணுவ சேவையில் பங்கேற்பதை தடை செய்யும் உத்தரவு உள்ளிட்ட சட்டப்பூர்வ சவால்கள் தொடர்கின்றன.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
