சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய புகைப்படங்கள்! மூடிய அறையில் இரகசிய சாட்சியமளித்த நபர்
சர்ச்சைக்குரிய தொழிலதிபர், பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்பு குறித்து, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் அந்நாட்டு நாடாளுமன்றக் குழுவில் மூடிய அறையில் சாட்சியமளித்து வருகிறார்.
1983 ஆம் ஆண்டுக்குப்பிறகு, அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒன்றின் முன் முன்னிலையாகும் முதல் முன்னாள் ஜனாதிபதி இவராவார்.
இதற்கு முந்தைய நாள், அவரது மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன், இதே குழுவின் முன் சுமார் ஆறு மணி நேரம் சாட்சியமளித்தார்.
எப்ஸ்டீனின் குற்றச்செயல்கள்
ஹிலாரி தனது சாட்சியத்தில், எப்ஸ்டீனின் குற்றச்செயல்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டதோடு, இந்த விசாரணையை ஒரு "அரசியல் நாடகம்" என்றும் விமர்சித்தார்.

எப்ஸ்டீன் தொடர்பான இரகசிய ஆவணங்களில் பில் கிளிண்டனின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், எப்ஸ்டீனின் தனி விமானத்தில் தாம் பயணம் செய்துள்ளதாக கிளிண்டன் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தாலும், எப்ஸ்டீன் செய்த குற்றங்கள் குறித்து தமக்கு எந்தத் தகவலும் தெரியாது என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஆவணங்களில் பெயர்
ஹிலாரி கிளிண்டனின் சாட்சியம் அடங்கிய வீடியோவை விரைவில் வெளியிடப்போவதாக குடியரசுக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஆவணங்களில் பெயர் இடம்பெறுவது மட்டுமே ஒருவரை குற்றவாளியாக உறுதிப்படுத்தாது என்றும் குறிப்பிடப்படுகிறது.
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri