எப்ஸ்டின் விவகாரம்: நான் ஏமாற்றப்பட்டேன்..! நோர்வே இளவரசி உருக்கம்
நோர்வே நாட்டு இளவரசி மெட்டே - மரிட் (Mette-Marit), மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான (Jeffrey Epstein) தனது நட்பு குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
நோர்வே நாட்டின் முடிசூடா இளவரசி மெட்டே - மாரிட், பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான தனது கடந்தகால உறவு குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட மில்லியன் கணக்கான எப்ஸ்டின் ஆவணங்களில் இளவரசியின் பெயர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டிருந்ததால் நோர்வே அரச குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இது தொடர்பாக அரசு தொலைக்காட்சியான NRKக்கு அளித்த பேட்டியில், "நான் எப்ஸ்டினால் கையாளப்பட்டேன் மற்றும் வஞ்சிக்கப்பட்டேன்.
அவரைச் சந்தித்திருக்கவே கூடாது என்று இப்போது வருந்துகிறேன்" என்று இளவரசி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்: மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த திடுக்கிடும் தகவல்
எப்ஸ்டின் ஆவணங்கள்
வெளியான ஆவணங்களின்படி, எப்ஸ்டின் 2008இல் சிறை சென்ற பிறகும், 2011 முதல் 2014 வரை இளவரசி அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். மேலும், 2013இல் எப்ஸ்டினின் பாம் பீச் (Palm Beach) இல்லத்தில் அவர் தங்கியிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2011இலேயே எப்ஸ்டின் பற்றி இணையத்தில் தேடியபோது அவருடைய பின்னணி "சரியாகத் தெரியவில்லை" என்று இளவரசி மின்னஞ்சல் அனுப்பியிருந்ததும் தற்போது அம்பலமாகியுள்ளது.
எனினும், எப்ஸ்டின் செய்த எந்தவொரு சட்டவிரோதச் செயலையும் தான் நேரில் பார்த்ததில்லை என்றும், அவர் தன்னை ஒரு நல்ல நண்பராகக் காட்டிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி நோர்வே மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பிரதமரே இந்த விவகாரத்தில் இளவரசியின் செயல்பாடுகள் சரியில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இளவரசியின் மகன் மரியஸ் போர்க் ஹோய்பி (Marius Borg Høiby) பாலியல் வன்புணர்வு வழக்கை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த எப்ஸ்டின் விவகாரம் நோர்வே முடியாட்சிக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
தற்போதைய கருத்துக் கணிப்புகளின்படி, நோர்வே மக்களில் 44 சதவீதம் பேர் மெட்டே-மாரிட் எதிர்கால ராணியாக வருவதை விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
இளவரசி எந்தக் குற்றச்சாட்டிலும் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், எப்ஸ்டின் போன்ற ஒருவருடன் பழகியது அவரது ஆளுமை மற்றும் முடிவெடுக்கும் திறனைச் சந்தேகிக்க வைத்துள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri
ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள்... இதோ விவரம் Cineulagam