யாழில் மதுபோதையில் பயணிகளுடன் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி கைது
மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று(23) இரவு 7 மணியளவில் காரைநகர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்திய சாரதி மது போதையில் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மானிப்பாய் பொலிஸார் சண்டிலிப்பாய் - கட்டுடை பகுதியில் குறித்த பேருந்தினை மறித்து சாரதியை பரிசோதித்துள்ளனர்.
இதன்போது சாரதி மது போதையில் இருந்தமையை உறுதி செய்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை பிறிதொரு சாரதியை வரவழைத்து பேருந்தினை அனுப்பி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
