இ.போ.ச ஊழியர்கள் தொடர்பில் அதிகாரிகள் கரிசனை கொள்வதில்லை: இ.போ.ச வட பிராந்திய ஊழியர்கள்
பணிக்கு சென்று திரும்புவதற்கு தமக்கு பெட்ரோல் வழங்கக் கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் அறிவித்திருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(27) இடம்பெறுகின்றது.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "வடக்கு மாகாண ஆளுநரும், யாழ்.மாவட்ட அரச அதிபரும் வாக்குறுதி வழங்கிய நிலையில் போராட்டம் கைவிடப்படுகின்றது என சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
செய்தி
அந்த செய்திகளில் உண்மையில்லை.நாங்கள் தொடர்ந்தும் எமது போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
தூர தேசங்களிலிருந்து வருபவர்கள் குறித்த நேரத்துக்குள் அலுவலகத்திற்கு செல்ல முடியாமையால் எங்கள் வரவு கூட விடுப்பாகவே கருதப்படுகின்றது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் புறக்கணிப்பு மேற்கொண்டால் உடனடியாகவே அதிகாரிகள் தலையிட்டு அவர்களுக்கு தீர்வு வழங்குகின்றார்கள்.
தீர்வு
ஆனால், கோவிட் காலத்திலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கரிசனை கொள்வதில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு பெட்ரோல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
நாடளாவிய ரீதியில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு |
May you like this video





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
