நாடளாவிய ரீதியில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(Photo)

Jaffna Transport Fares In Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Theepan Jun 27, 2022 06:00 AM GMT
Report

வடபிராந்தியத்தில் இன்று (27) அதிகாலை வரை பெரும்பாலான இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சேவை ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க பெட்ரோல் வழங்கப்பட வேண்டும்.

பெட்ரோல் வழங்கப்படாத பட்சத்தில் இன்று முதல் பணியில் ஈடுபடப் போவதில்லையென இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய தொழிற்சங்கங்கள் நேற்று(26) அறிவித்திருந்தன.

பெட்ரோல் இன்மை 

நாடளாவிய ரீதியில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(Photo) | Workers Strike Jaffna

இதை தொடர்ந்து, யாழ் மாவட்டத்திலுள்ள இ.போ.ச ஊழியர்களிற்கு பெட்ரோல் இன்று வழங்கப்படுமென யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

எனினும், இன்று கடமைக்கு சமூகமளிக்க எரிபொருள் இல்லையென தெரிவித்து, ஊழியர்கள் வடக்கிலுள்ள இ.போ.ச சாலைகளின் போக்குவரத்து சேவையை இதுவரை ஆரம்பிக்கவில்லை.

நாடளாவிய ரீதியில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(Photo) | Workers Strike Jaffna

வழக்கமாக அதிகாலையில் இடம்பெறும் சேவைகளும் இடம்பெறவில்லை. ஆனாலும் ஒரு சில பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெட்ரோல் இன்று கிடைத்தால் இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

வவுனியா

நாடளாவிய ரீதியில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(Photo) | Workers Strike Jaffna

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையினர் இன்றையதினம்(27) பணிபகிஷ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

வடமாகாணத்திலுள்ள ஏழு சாலைகளில் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் கடமைக்கு செல்வதற்கான பெட்ரோலினை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவை

தமக்கான பெட்ரோலினை உரிய முறையில் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்து ஏழு சாலைகளை சேர்ந்த சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் வவுனியா சாலை ஊழியர்களும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(Photo) | Workers Strike Jaffna

இதன் காரணமாக வவுனியா சாலைக்குரிய பேருந்துகள் கடமைக்கு செல்லாது இ. போ.ச வவுனியா சாலையில் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதென எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமக்கான உரிய தீர்வினை பெற்றுத்தரும் வரை இந்த பணிபகிஷ்கரிப்பு தொடரும் என சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.  

செய்தி-ஷான்

பருத்தித்துறை

பருத்தித்துறை சாலை ஊழியர்கள் தமக்கு பெட்ரோல் வழங்கவேண்டும் என கோரி இன்று அதிகாலை முதல் போராட்டம் நாடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் இதுவரை தொடர்கிறது.

இதனால் மக்கள் போக்குவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(Photo) | Workers Strike Jaffna

இந்நிலையில் வடமராட்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தமது சேவையை அதிகரித்துள்ளது.

குறிப்பாக நாளாந்தம் 15 நிமிடத்திற்கு ஒரு தடவை இடம்பெற்ற சேவையை இன்று அதிகாலை முதல் 10 நிமிடத்திற்கு ஒருதடவை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் ஓரளவு மக்கள் பயனடைவது குறிப்பிடதக்க விடயமாகும்.

செய்தி-எரிமலை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US