வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளருக்கான தெரிவில் ஈபிடிபியும் இணைவு
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளருக்கான தெரிவில் ஈபிடிபியின் துஷ்யந்தன் விக்டர்ராச் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
ஏற்கனவே பதவி வகித்து வந்த தவிசாளர் தனது பதவியினை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய தவிசாளருக்கான தெரிவு விரைவில் இடம்பெறவுள்ளது. அந்தவகையில் தவிசாளருக்கான தெரிவில் ஈபிடிபி சார்பில் நான் போட்டியிடவுள்ளேன்.
அந்தவகையில் தவிசாளாராக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் சபையை சீரான முறையில் வழிநடாத்தி செல்ல முடியும் என்று எதிர்பார்கின்றேன்.
குறிப்பாக எமது கட்சி சார்பாக வன்னியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், பலம்பொருந்திய அமைச்சர் ஒருவர் இருக்கும் நிலையில் அவர்களுடாக மீதம் இருக்கும் சபையின் ஆட்சிக்காலப்பகுதியில் விசேட நிதிகளை பெற்று எமது சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த முடியும் என்று எதிர்பார்கின்றோம்.
எனவே தவிசாளர் தெரிவில் ஏனைய உறுப்பினர்களும் எனக்கு ஆதரவினை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைதுறைபற்று சபையின் தவிசாளர் பதவியினை ஆட்சி காலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கீட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிளட் மற்றும் ரெலோ கட்சிகளிற்கிடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படாகியிருந்தது.
அதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
