எண்ணெய் இறக்குமதி மோசடியில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்! அம்பலபடுத்திய தொழிலதிபர்
எண்ணெய் இறக்குமதிக்காக வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்தை வைத்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் சிலர் தொடர்பிலான தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
முறையாக எரிசக்தி அமைச்சிடம் இருந்து இறக்குமதியாளர்களால் பெறப்படும் அனுமதி பாத்திரங்களை அதிகாரத்தின் மூலம் இவ்வாறு முன்னாள் அமைச்சர்கள் மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துறைமுக அதிகார சபைக்கும், எரிசக்தி அமைச்சிக்கும் இடையில் காணப்படும் தொடர்பின் அடிப்படையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறான மோசடிகளில் சிக்கி தனது சொத்துக்களை இழந்த தொழிலதிபரான காஷ்மீர் ஆன்ட்ரூ ப்ரைன் கிரிஸ்டி, இந்த விடயங்கள் அனைத்தையும் லங்காசிறி ஊடகத்தின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.
லங்காசிறியின் விசேட நேர்காணலில் கலந்துக்கொண்ட அவர், எரிசக்தி அமைச்சுக்கும், துறைமுக அதிகார சபைக்கும் இடையிலான தொடர்பு, அனுமதி வழங்கப்படும் இறக்குமதி பொருட்கள் எவ்வாறு மோசடி செய்யப்படுகின்றன, அந்த மோசடியில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் யார் என்பதை தொடரும் காணொளியில் வெளிப்படுத்தியுள்ளார்...

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
