ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது, இன்றையதினம் (14.10.2024) முல்லைத்தீவில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமை தாங்கினார்.
கட்சி உறுப்பினர்கள்
இதன்போது, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்தில் முல்லைத்தீவில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களான வின்சன் டிப்போல் அருள்நாதன், அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ், சின்னத்துரை கலாநிதி, கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா,
தமிழரசு கட்சியினை எடுத்தால் அது இன்று மூன்று கட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழரசுகட்சி, ஜனநாயக தமிழரசுகட்சி, சுஜேட்சை என பிரிந்திருக்கிறார்கள். தமிழரசு கட்சி என இருப்பவர்களே இரண்டு அணியாக பிரிந்து செயல்படுகின்றார்கள்.
ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் .அதுதான் அடிப்படை ஆனால் இங்கு நல்ல நோக்கத்திற்காக அந்த சுதந்திரத்தினை பயன்படுத்தாமல் அவர்கள் தம் சுயலாபத்திற்காக தான் பயன்படுத்துகின்றார்கள்.
அதனைவிட தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் இன்று சங்கை ஊதிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |