கனடா புறப்படும் முன் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த புதிய தூதுவர்
கனடாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹன அம்பகொல்ல, தனது புதிய இராஜதந்திரப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காகக் கனடாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (25.11.2026) இடம்பெற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான தற்போதைய நட்புறவு
கனடாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக ரோஹன அம்பகொல்லவைச் சந்தித்தார் என்று குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர், அவரது புதிய உத்தியோகபூர்வப் பணிகள் வெற்றிகரமாக அமையத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான தற்போதைய நட்புறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவர் செயற்படுவார் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.