பாவனைக்கு உதவாத பூசணியால் ஏற்பட்டுள்ள அசௌகரியம்(Photos)

Sri Lankan Tamils Mullaitivu Northern Provincial Council
By Uky(ஊகி) Sep 14, 2023 11:56 AM GMT
Report

வடக்கு, கிழக்கில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள நிலங்கள் பொதுமக்களின் அசமந்த போக்கின் விளைவாக சுற்றுசூழல் சவால்களை எதிர்நோக்கி வருகின்றன.

தமிழர் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் கோஷமிடும் நேரத்தில் ஒரு சில தரப்பினர் பொது நிலங்களை கவனிப்பாரற்று விடுவதும், அக்கறையின்றி செயற்படுவதும் தாயக நிலங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் வலுப்படுத்துகிறது.

அந்த வகையில் சிலாவத்தை முள்ளியவளை வீதியும் முல்லைத்தீவு முள்ளியவளை வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள சந்தியில் பாவனைக்குதவாத தர்ப்பூசனி (வத்தகைப் பழம்) பழங்கள் கொட்டப்பட்டுள்ளன.

மனித எச்சங்களை மறைக்கவே பௌத்த விகாரைகளை அமைக்கின்றனர்: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு

மனித எச்சங்களை மறைக்கவே பௌத்த விகாரைகளை அமைக்கின்றனர்: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

தோட்டத்தில் இருந்து அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு பொருந்தாது என கருதப்படும் பெருந்தொகையான தர்ப்பூசனி பழங்களே இவ்வாறு கொட்டப்பட்டுள்ளன.

சிலாவத்தையிலிருந்து உடுப்புக்குளம் வரை பரந்துள்ள சுமார் மூவாயிரம் ஏக்கர் தென்னம் தோப்பில் தென்னை மீள் பயிர்ச் செய்கை செயற்பாட்டினை இலகுவாக்குவதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு தென்னம் தோப்பில் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்காக வசதியளித்தது.

பாவனைக்கு உதவாத பூசணியால் ஏற்பட்டுள்ள அசௌகரியம்(Photos) | Environmental Impact In Mullaitivu

தர்ப்பூசனி, நெல், நிலக்கடலை என்பனவற்றை பயிரிடும் விவசாயத்தில் பரவலாக விவசாயிகள் பலர் ஈடுபட்டு வந்தனர். தென்னம் தோப்பில் பெருமளவு நிலம் கழிவுகளை கொட்டுவதற்காக இருந்த போதும் இந்த தர்பபூசனி கழிவுகளை இன்று நண்பகல் (14.09.2023) முச்சந்தியில் கொட்டிவிட்டுச் சென்றமை மனதை உறுத்துவதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் நிறுவுனர் நகுலன் கூறியுள்ளார்.

யாழ். கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

யாழ். கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

எமது நிலங்கள் அதன் அடையாளங்கள்

பலதரப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டு செயற்பாட்டை சரிசெய்ய முயன்றாலும் இந்த செயற்பாட்டால் அந்த சந்தி துர்நாற்றமாகி அசுத்தமாக வாய்ப்புள்ளது என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பாவனைக்கு உதவாத பூசணியால் ஏற்பட்டுள்ள அசௌகரியம்(Photos) | Environmental Impact In Mullaitivu

அத்தோடு இந்த செயற்பாடு ஏனையோரையும் வீதிகளில் கழிவுகளை கொட்டுவதற்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக அமைந்து விடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விற்பனைக்கு உதவாத பழங்களை விவசாயிகள் முறையான விதத்தில் அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிடின் இவ்வாறான செயற்பாடுகளினால் காலப்போக்கில் எமது நிலங்களையும் அதன் அடையாளங்களையும் இழக்கும் நிலை ஏற்படகூடும்.

பாவனைக்கு உதவாத பூசணியால் ஏற்பட்டுள்ள அசௌகரியம்(Photos) | Environmental Impact In Mullaitivu

பாவனைக்கு உதவாத பூசணியால் ஏற்பட்டுள்ள அசௌகரியம்(Photos) | Environmental Impact In Mullaitivu

யாழில் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி போராட்டம்(Photos)

யாழில் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி போராட்டம்(Photos)

பாவனைக்கு உதவாத பூசணியால் ஏற்பட்டுள்ள அசௌகரியம்(Photos) | Environmental Impact In Mullaitivu

வவுனியாவில் பழுதடைந்த கேக் விற்பனை! பொது சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு

வவுனியாவில் பழுதடைந்த கேக் விற்பனை! பொது சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு

பாவனைக்கு உதவாத பூசணியால் ஏற்பட்டுள்ள அசௌகரியம்(Photos) | Environmental Impact In Mullaitivu

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US