கிண்ணியாவில் இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின விழிப்புணர்வு நிகழ்வுகள்
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இடம்பெற்று வரும் சுற்றாடல் வாரத்தில் நேற்றைய நாள் நிகழ்வாக கரையோர பகுதிகளில் காணப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் சிரமதான நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனியின் தலைமையில் இடம்பெற்றது.
சிரமதான நிகழ்வு
இந்த சிரமதான நிகழ்வு, பைசல் நகர், அண்ணல் நகர், மாஞ்சோலை சேனை, ரஹ்மானிய நகர் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இடம்பெற்றன.
இதன்போது கிண்ணியா சுகாதார வைத்திய பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். அஜித், கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம். அனிஷ், கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஏ.முஹம்மது இம்ரான், கடற்படையினர், பாதுகாப்பு படையினர், கிண்ணியா நகர சபை உத்தியோகத்தர்கள் , கிண்ணியா சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்
இதேவேளை, கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியாவில் அமைந்துள்ள தி/கிண்/ இக்ரா வித்தியாலயத்தில் நேற்று (04) மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது கிழக்கு மாகாண கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.ஸ்ரீபதியின் தலைமையில் நடைபெற்றது.
"பிளாஸ்டிக் மாசுபாட்டினை முடிவுக்கு கொண்டுவருதல்" எனும் தொனிப்பொருளில் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் வாரம்
இதன்போது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
உலக சுற்றுச்சூழல் தின தேசிய கொண்டாட்டத்துடன் இணைந்து தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றுச்சூழல் வாரம் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 05 ஆம் திகதி வரை தொடர் நிகழ்ச்சிகளை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
