கிண்ணியாவில் இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின விழிப்புணர்வு நிகழ்வுகள்

Sri Lankan Peoples Sri Lankan Schools School Children
By H. A. Roshan Jun 05, 2025 01:20 AM GMT
Report

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இடம்பெற்று வரும் சுற்றாடல் வாரத்தில் நேற்றைய நாள் நிகழ்வாக கரையோர பகுதிகளில் காணப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் சிரமதான நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனியின் தலைமையில் இடம்பெற்றது.

சிரமதான நிகழ்வு

இந்த சிரமதான நிகழ்வு, பைசல் நகர், அண்ணல் நகர், மாஞ்சோலை சேனை, ரஹ்மானிய நகர் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இடம்பெற்றன.

கிண்ணியாவில் இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின விழிப்புணர்வு நிகழ்வுகள் | Environmental Awareness For School Students Kinnia

இதன்போது கிண்ணியா சுகாதார வைத்திய பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். அஜித், கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம். அனிஷ், கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஏ.முஹம்மது இம்ரான், கடற்படையினர், பாதுகாப்பு படையினர், கிண்ணியா நகர சபை உத்தியோகத்தர்கள் , கிண்ணியா சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 

இதேவேளை, கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியாவில் அமைந்துள்ள தி/கிண்/ இக்ரா வித்தியாலயத்தில் நேற்று (04) மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.

கிண்ணியாவில் இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின விழிப்புணர்வு நிகழ்வுகள் | Environmental Awareness For School Students Kinnia

குறித்த நிகழ்வானது கிழக்கு மாகாண கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.ஸ்ரீபதியின் தலைமையில் நடைபெற்றது.

"பிளாஸ்டிக் மாசுபாட்டினை முடிவுக்கு கொண்டுவருதல்" எனும் தொனிப்பொருளில் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் வாரம் 

இதன்போது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

கிண்ணியாவில் இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின விழிப்புணர்வு நிகழ்வுகள் | Environmental Awareness For School Students Kinnia

உலக சுற்றுச்சூழல் தின தேசிய கொண்டாட்டத்துடன் இணைந்து தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுச்சூழல் வாரம் மே மாதம் 30 ஆ‌ம் திகதி முதல் ஜூன் மாதம் 05 ஆ‌ம் திகதி வரை தொடர் நிகழ்ச்சிகளை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US