மட்டக்களப்பில் சிறு குற்றவாளிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் விற்பனை நிலையம் திறந்து வைப்பு
சிறு குற்றவாளிகளை சீர்திருத்தி அவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கத்தின் கீழ் விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலையத்தை மட்டு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் இன்று (13.12.2023) திறந்து வைத்துள்ளார்.
நீதிமன்றத்துக்கு அருகாமையில் வீதி ஓரத்தில் நிர்மாணிக்கப்பட்ட
கட்டடத்தை நீதவான் பீற்றர் போல் நாடாவெட்டி திறந்து வைத்ததையடுத்து அங்கு
விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன .
குற்றவாளிகளை சீர்திருத்தும் நடவடிக்கைகள்
சமுதாயத்தில் சிறு குற்றவாளிகளை சீர்திருத்தி அவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தின் கீழ் இந்த விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் முகம்மட் ஸப்றீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல், சமுதாய சீர்திருத்த வேலைப்பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மாநகர ஆணையாளர், நீதவான் நீதிமன்ற பதிவாளர், மட்டக்களப்பு சிறுவர் நன்நடத்தை நிலையப்பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து, இதுபோன்று குற்றவாளிகளை சீர்திருத்தும் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மட்டக்களப்பு பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு - கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உடற்கூற்று மாதிரிகள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |