இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள கூரகல தப்தர் ஜெய்லானியின் நுழைவாயில் மினாராக்கள் (PHOTO)
வரலாற்றுப் புகழ்மிக்க கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் வளாகத்தில் அமையப்பெற்றிருந்த நுழைவாயில் மினாராக்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் பெக்கோ இயந்திரம் மூலம் அகற்றப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டிற்கு பிரதேசவாசிகள், பள்ளிவாசல் நிர்வாகம் உட்பட முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மினாரா அகற்றப்பட்டுள்ளமையை பள்ளிவாசலுக்குப் பொறுப்பானவர்கள் அறிந்து உடனடியாக இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் அம்ஜாட் மௌலானா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘ஜெய்லானி பள்ளிவாசல் தொல்பொருள் பிரதேசத்திலே அமைந்துள்ளது. நாட்டில் ஒரே சட்டமே இருக்க வேண்டும். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கிறோம். சட்ட ரீதியான ஏற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஊடாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். ஜெய்லானி பள்ளிவாசல் பௌத்தர்களின் புனித பூமியிலே அமைந்துள்ளது.
இப்பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும். பதிலாக முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு வழிபாட்டுத்தலம் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
