ஒட்டு மொத்த அரசையும் கொளுத்தி வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் - மனோ கணேசன்
விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பாதீடு ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் இன்று (07) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்றுக்கு மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தன.அந்நாடுகள் பொருளாதாரத்தை முகாமை செய்யவில்லையா? அப்படியானால் எமது நாட்டு அரசுக்கு மட்டும் ஏன் தடுமாற்றம்?
தேசிய உற்பத்தியில் புரட்சி செய்ய போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அறிவித்துள்ளார்.
மஞ்சளுக்கு தடை விதிக்கப்பட்டது. நாட்டில் தற்போது மஞ்சள் இருக்கின்றதா? பாசி பயறு, உளுந்து உள்ளிட்ட பொருட்களும் இல்லை. அரசு தோல்வி கண்டுள்ளது.
விவசாய அமைச்சரின் மட்டுமல்ல இராஜாங்க அமைச்சரின் கொடுப்பாவியையும் எரிக்க வேண்டும் என்கின்றனர்.இவ்விருவரின் மட்டுமல்ல ஒட்டு மொத்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
எமது பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு நிவாரணம் வேண்டும்.
யாரோ பெத்த பிள்ளைக்கு, யாரோ பெயர் வைப்பது போல தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு சிலர் இன்று பெயர் வைக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam