வாகரை பிரதேச செயலாளராக எந்திரி ஜீ.அருணன் நியமனம்
கோறளைப்பற்று வடக்கு - வாகரைப் பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளராக பொறியியலாளர் ஜீ.அருணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாகரைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளருக்கான வரவேற்பினைத் தொடர்ந்து புதிய பிரதேச செயலாளர் தனது பதவியினை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதன்போது வாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் புதிய பிரதேச செயலாளரை மலர் மாலைகள் அணிவித்து வரவேற்பளித்ததுடன் தமது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
புதிய பிரதேச செயலாளரை வரவேற்குமுகமாக இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் தனது கன்னி உரையின்போது,
"கடந்தகால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் வாகரைப் பிரதேசத்தினதும், இப்பகுதி மக்களினதும் முன்னேற்றத்திற்காகவும், சுபிட்சமான வாழ்வை ஏற்படுத்தும் பொருட்டும் நேர்மையாக தமது கடமையினை மேற்கொள்வேன்.
அதேபோல் இங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்கள் அனைவரும் இப்பிரதேசத்திற்காகத்
தியாக மனப்பான்மையுடன் ஒத்துழைப்பு வழங்கி சேவையாற்ற வேண்டுமெனவும்
கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த பிரதேச செயலகத்திற்குப் புதிதாகப் பிரதேச செயலாளராகப் பதவியேற்றுள்ள இலங்கை
நிருவாக சேவை அதிகாரியான இவர் ஏற்கனவே காணி ஆணையாளர் திணைக்களத்தின்
உதவிக்காணி ஆணையாளராகவும், பொதுத்திறைசேரியின் தேசிய திட்டமிடல்
திணைக்களத்தின் உதவி அத்தியட்சராகவும், கிரான், ஆரையம்பதி, பட்டிப்பளை,
மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராகக்
கடமையாற்றியுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆட்பதிவுத் திணைக்களத்தின் உதவி
ஆணையாளராகவும் தனது சிறந்த சேவையினை ஆற்றியுள்ளார்.




அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam