ஆங்கில மொழி மூல கற்கை! வெளியிடப்பட்டுள்ள எதிர்ப்பு
இலங்கை பாடசாலைகளில் ஆரம்ப கல்வியை ஆங்கிலம் மூலம் கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதை ஆரம்பிக்க உள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா கூறியுள்ளமைக்கு சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆங்கிலம் என்பது கௌரவம் என்ற தாழ்ந்த மனநிலையில் இருக்கும் கறுப்பு வெள்ளையர்கள் இப்படியான நடவடிக்கைகளை எடுப்பதாக சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் உறுப்பினர் மருத்துவர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இப்படியான நடவடிக்கைகளை சீ. டப்ளியூ. டப்ளியூ. கன்னங்கர தனது சவக்குழியில் இருந்து சபிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமது தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் பிள்ளைகளின் மனநிலை மேம்பட முக்கிய காரணமாக அமையும் என்பது தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலைப்பாடாக உள்ளது. தாழ்ந்த மனநிலையில் இருக்கும் கறுப்பு வெள்ளையர்களுக்கு இவை பொருந்தாது.
ஆங்கில மொழியை எமது நாட்டு பிள்ளைகளுக்கு பலன்தரும் வகையில் கற்பிக்க தவறியுள்ள எமது கல்வி திணைக்களம், தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு ஆங்கிலம் மூலம் ஆரம்ப கல்வியை வழங்க தயாராகி வருவது நேர்மையான மனநிலையில் அல்ல. இவர்கள் இலவச கல்வியில் படித்த நபர்கள் இல்லையா?.
கன்னங்கர அவர்கள் இவர்களை கல்லறையில் இருந்தவாறு சபிப்பார் என்பது நிச்சயம். பிள்ளைகள் மீதுள்ள அன்பால் இதனை செய்வதில்லை. இலவச கல்வியை அழிக்கும் எதிர்பார்ப்பில் இவர்கள் செயற்படுகின்றனர்.
ரணில் விக்ரமசிங்க கல்வியமைச்சராக இருந்த போது இப்படியான மிகப் பெரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு முன்னர், மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை ஏற்படுத்தும் நோக்கில், வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அப்படி பார்க்கும் போது இவர்கள் ரணில் விக்ரமசிங்கவை விட தொலைவில் இருக்கின்றனர் எனவும் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 11 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam