சில நீதிமன்றங்களில் பதிவுகளை பேண ஆங்கில மொழியை பயன்படுத்துவது குறித்து பரிசீலனை
சில நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பதிவுகளை பேணுவதற்கும் ஆங்கில மொழியை பயன்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வணிகத் துறையில் உள்ள விவரங்கள் முக்கியமாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த உள்ளடக்கங்களை சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பதற்கு கணிசமான செலவும் நேரமும் தேவைப்படுகிறது.
வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு
இதன் காரணமாக, வர்த்தக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால், தொழில் முனைவோர் பாதகங்களை எதிர்கொள்வதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையானது, ஒரு நாட்டில் தொழில் முயற்சிகளை நடத்தும் திறனைக் கருத்திற்கொண்டு, எளிதாக வணிகம் செய்வதற்கான தரவரிசையில் இலங்கையின் நிலையைப் பாதித்துள்ளது.
இதற்குப் பரிகாரமாக, அமைச்சரவையின் ஒப்புதலுடன், ஆங்கிலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் அரசியலமைப்பின் விதிகளுக்கு இணையாக, நீதித்துறை அமைச்சரால் உத்தரவு பிறப்பிக்கப்படுவது பொருத்தமானது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழியில் சட்டப் பதிவுகள்
இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்களில் உள்ள அனைத்து செயற்பாடுகள் அல்லது சட்டப் பதிவுகள் ஆங்கில மொழியில் இருப்பதன் அவசியம் உணரப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
