இலங்கை கல்வித் துறையில் மாற்றம்! வழங்கப்படும் சலுகை - ஜனாதிபதி ரணிலின் நடவடிக்கை

Ministry of Education Ranil Wickremesinghe Sri Lankan Peoples Education
By Benat Nov 17, 2023 08:06 AM GMT
Report

2030 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டமும் தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில மாணவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டுள்ளார். 

வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு: முதல் இடத்தில் ஐவர்

வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு: முதல் இடத்தில் ஐவர்

பணம் இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு பிள்ளைக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாது. சொத்துக்களை விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இதன்போது ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். 

மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்

இந்நாட்டு பிள்ளைகளின் உயர் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய பல்கலைக்கழங்களை ஆரம்பிக்கவிருப்பதாகவும், அதற்கு பங்களிப்பு வழங்கும் தனியார் துறையினருக்கு குறைவின்றி ஆதரவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் உறுதியளித்தார்.

நாட்டின் மீது அக்கறை இருக்குமாயின் இந்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்காக புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க புலம்பெயர் தமிழ், சிங்கள இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இலங்கை கல்வித் துறையில் மாற்றம்! வழங்கப்படும் சலுகை - ஜனாதிபதி ரணிலின் நடவடிக்கை | English For All Ranil S Plan

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதே அனைத்து பெற்றோரின் எதிர்பார்ப்பாகும். கல்வியை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் ஜப்பான், சீனா, அரபு, கொரிய மொழிகளையும் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.

2030 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டமும் தயாரிக்கப்படும்.

ஜே ஷாவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில்

ஜே ஷாவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில்

இந்நாட்டின் உயர்கல்வி தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இந்நாட்டின் இலவசக் கல்வி இருப்பதாக கூறினாலும் பெருமளவானோர் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் இந்நாட்டு பிள்ளைகள் உயர்கல்வி பயில்கிறார்கள்.

அந்த நாடுகளில் காணப்படும் கல்வி முறைமைகளை நமது நாட்டிலும் செயற்படுத்துவோம். பல்கலைக்கழங்களுக்கு செலுத்த அவசியமான பணத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்குவதே இலவச உயர்கல்வியாகும் என பலரும் கூறுகிறார்கள். இருப்பினும் மற்றைய நாடுகளில் அந்த முறையில் உயர்கல்வி வழங்கப்படுவதில்லை.

இலங்கை கல்வித் துறையில் மாற்றம்! வழங்கப்படும் சலுகை - ஜனாதிபதி ரணிலின் நடவடிக்கை | English For All Ranil S Plan

கல்விச் செயற்பாடுகளை தொடர மாணவர்களுக்கு சலுகை கடன் வழங்கப்படுகிறது. அதனால் விரும்பிய பல்கலைக்கழகத்தைத் தெரிவு செய்யும் வாய்ப்பு மாணவருக்கு கிடைக்கிறது. எமது நாட்டில் அந்தத் தெரிவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே செய்கிறது. அதனால் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

அதேபோல் பணம் இல்லாததன் காரணத்தால் எந்தவொரு மாணவருக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடாது.

இந்நாட்டில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தற்போதுள்ள பல்கலைக்கழகங்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகள்: பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகள்: பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

பல்கலைக்கழகங்களுக்கு அவசியமான வசதிகளை வழங்கி அதன் பலன்களை 05 வருடங்களில் அடைய வேண்டும். அதன் போது மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கும்.

அதேபோல் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு இணையான 03 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கிறோம். அதேபோல் அரச சார்பற்ற நிறுவனங்களை ஆரம்பிக்கவும் நாம் அனுமதி வழங்குவோம்.

தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில மாணவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படும். எனவே காணிகளை விற்பனை செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நாட்டின் பல்கலைக்கழகங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் வெளிநாட்டு மாணவர்களின் வருகையும் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கல்வித் துறையில் மாற்றம்! வழங்கப்படும் சலுகை - ஜனாதிபதி ரணிலின் நடவடிக்கை | English For All Ranil S Plan

இலங்கை கல்வித் துறையில் மாற்றம்! வழங்கப்படும் சலுகை - ஜனாதிபதி ரணிலின் நடவடிக்கை | English For All Ranil S Plan

ராஜபக்சவினர் மீது எழுந்துள்ள சந்தேகம்

ராஜபக்சவினர் மீது எழுந்துள்ள சந்தேகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US