இங்கிலாந்து மாஸ்டர்ஸை தோற்கடித்த இந்திய மாஸ்டர்ஸ் அணி
இந்திய மாஸ்டர்ஸ் (India Masters)அணிக்கும் இங்கிலாந்தின் மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற 20க்கு20 போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப்போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்திய மாஸ்டர்ஸ் அணி
இந்தநிலையில் நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.
இதில் ஆகக்கூடுதலான ஓட்டங்களான 25 என்ற ஓட்ட எண்ணிக்கையை மெடி பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 11.4 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெறறியீட்டியது.
இதில், குர்கீரட் சிங் மான் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும், சச்சின் டெண்டுல்கர் 34 ஓட்டங்களையும், யுவ்ராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |