சொட்டு மருந்து என்று நினைத்து, ஒட்டுபசையை மகனின் கண்ணில் ஊற்றிய தந்தை: இங்கிலாந்தில் சம்பவம்
இங்கிலாந்தில் சொட்டுமருந்து என நினைத்து ஒட்டுப்பசையை தமது மகனின் கண்ணில் ஊற்றிய தந்தையால், மகன், 4 நாட்கள் கண்களை திறக்கமுடியாமல் அவதியுற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் வடக்கு யோர்க்ஷயா் (North Yorkshire) மாகாணம் திரிஷ்க்( Thirsk ) நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேவின் டே( Kevin Day). என்ற தந்தை, தமது 9 வயதான ரூபர்ட்( Rupert) என்ற தமது மகனுக்கே சொட்டு மருந்துக்கு பதிலாக ஒட்டுப்பசையை ஊற்றியுள்ளாா்..
தமது மகன் கண் அாிப்பதாக கூறிய நிலையில் சொட்டு மருந்தை தேடிய தந்தை, ஒட்டுப்பசையை( Superglue) எடுத்து மகனின் இடது கண்ணில் ஊற்றியுள்ளாா்.
சிறிது நேரத்தின் பின்னரே தாம் மகனின் கண்ணில் ஊற்றியது ஒட்டுப்பசை என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. மகனிடம் கண்ணை திறக்குமாறு அவா் கூறியபோது மகனால் அது முடியவில்லை.
இதனை தொடர்ந்து மருத்துவக்குழுவினருக்கு கேவின் டே தகவல் வழங்கியுள்ளாா்.
விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் ரூபர்ட்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன்பின்னா் நான்கு நாட்களாக அவரால் கண்ணை திறக்கமுடியவில்லை.
4 நாட்களுக்கு பின்னர் ரூபர்ட்டின் கண்ணை மூடியிருந்த ஒட்டுப்பசை மெல்ல விலகியது.
இந்தநிலையில் தொடர் சிகிச்சைக்கு பின்னர் ரூபர்ட்டின் கண்பார்வை தற்போது நல்ல நிலைக்கு வந்துள்ளதாக அவரது தந்தை கேவின் தெரிவித்துள்ளார்.