டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி
இங்கிலாந்து(England) கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 இலட்சம் ஓட்டங்களை குவித்த ஒரே அணி என்ற உலக சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு( New Zealand) சுற்றுப்பயனம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
உலக சாதனை
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று(6) தொடங்கியது.
இதில் நாணயசுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடியய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 280 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 125 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இங்கிலாந்து அணி
இதனையடுத்து 155 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2ஆவது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 378 ஓட்டங்கள் குவித்தது.
இதன் மூலம் இங்கிலாந்து 533 ஓட்டகள் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 1,082ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 5 லட்சம் ஓட்டங்களை குவித்த ஒரே அணி என்ற உலக சாதனை படைத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணிகள்
5,00,126 - இங்கிலாந்து (1082 போட்டிகள், 18,954 இன்னிங்ஸ்)
4,29,000 - அவுஸ்திரேலியா (868 போட்டிகள், 15,183 இன்னிங்ஸ்)
2,78,751 - இந்தியா(India) (586 போட்டிகள், 10,119 இன்னிங்ஸ்)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |