அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள இலங்கை மின்சார சபையின் பொறியாளர் சங்கம்
இலங்கை மின்சார சபையின் பொறியாளர் சங்கம், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நியூ போற்றீஸ் எரிசக்தி நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட சட்டவிரோத உடன்படிக்கைக்குத் தடை விதிக்க கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த உடன்படிக்கைக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்திலிருந்து தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக மின்சாரசபையின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
2021, பெப்ரவரி 18 ஆம் திகதி சர்வதேச ஏலம் கோரப்பட்டபோதும், நியூ போற்றீஸ் எரிசக்தி நிறுவன முன்மொழிவுக்கு இணங்க, இலங்கை அரசாங்கம் 05.07.2021 மற்றும் 06.09.2021 திகதிகளில் அமைச்சரவைப் பத்திரங்களைச் சமர்ப்பித்தது. இதன் மூலம் யுகதனவி மின்நிலையத்தில் 40 சதவீத பங்குகளை அமரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எனவே இது தொடர்பான உடன்பாடு தன்னிச்சையானது. சட்டவிரோதமானது என்று மனுதாரர் தரப்பு தமது மனுவில் குறிப்பிட்டுள்ளது. சட்டமா அதிபர், பிரதமர், அமைச்சரவை, ஜனாதிபதி செயலாளர் மற்றும் திறைசேரியின் செயலாளர் உட்பட 73 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை நடைமுறையில் கேள்விப்பத்திரக்கோரலின் போது அந்த நடவடிக்கைகள் முடிவடையும் வரை ஏலங்களின் விவரங்கள் இரகசியமாக இருக்க வேண்டும்.
எனினும் அமெரிக்க நிறுவனம் குறிப்பிட்டிருந்த விலை, ஏலத்தொகையில் அதிகமாக
இருந்தது என்பதை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) எப்படி அறிந்துகொண்டார் என்று
ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க(Anurakumara Dissanayaka) கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 21 மணி நேரம் முன்

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
