புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்! அரசாங்கம் உறுதி
அரசாங்கத்தால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தத் திட்டங்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையும் மனிதாபிமானத்துடன் தீர்க்கப்படும் என்றும், அவற்றைத் தீர்க்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மன்னாரில் காற்றைலை திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், காலியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபையின் மறுசீரமைப்பு
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி ஒரு தேசியத் தேவை மற்றும் நாட்டின் வளர்ச்சித் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும், அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டமும் இதேபோன்றது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |